அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

யு.எஸ். ஓபன் சாம்பியன்: 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார் ஜோகோவிச்! 

ஜோகோவிச், 6-3, 7-6 (4), 6-3 என நேர் செட்களில் தனது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் மூன்றாவது யு.எஸ். ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார்...

News image
Updated On :30 ஜனவரி 2024, 4:44 pm

எழில்

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதி ஆட்டத்தில் ஜூவான் மார்டின் டெல் போட்ரோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச். இதன் மூலம் அவர் தனது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். 

ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இறுதி ஆட்டம் ஞாயிறு நள்ளிரவு நடைபெற்றது. இதில் முன்னணி வீரர் ஜோகோவிச், 6-3, 7-6 (4), 6-3 என நேர் செட்களில் தனது 14-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் மூன்றாவது யு.எஸ். ஓபன் பட்டத்தையும் வென்றுள்ளார். அவர் இதுவரை ஆறு ஆஸ்திரேலிய ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன், நான்கு விம்பிள்டன், மூன்று யு.எஸ். ஓபன் பட்டங்களை வென்றுள்ளார். ஃபெடரர் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் நடால் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று முன்னிலையில் உள்ளார்கள். 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.