பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

ஆசியப் போட்டிக்காக துபைக்குப் புறப்பட்டுச் சென்ற இந்திய வீரர்கள்!

ரோஹித் சர்மா, தோனி, அம்பட்டி ராயுடு, மனீஷ் பாண்டே, கெதர் ஜாதவ், குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், கலீக் அஹமது ஆகிய வீரர்கள்...

Published On :30 ஜனவரி 2024, 10:15 pm IST

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு நாடுகளில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்டவை பங்கேற்கின்றன. கடும் ஆட்ட சுமை காரணமாக கேப்டன் கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ள நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி பட்டத்தை தக்க வைக்க களமிறங்குகிறது. துபை, அபுதாபி நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு ஆட்டங்கள் தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டிகள் ஒளிபரப்பாகும்.

இந்நிலையில் ரோஹித் சர்மா தலைமையிலான 9 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் இப்போட்டிக்காக இன்று துபைக்குச் சென்றார்கள். இதர வீரர்கள் இரு நாள்கள் கழித்து துபைக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். ரோஹித் சர்மா, தோனி, அம்பட்டி ராயுடு, மனீஷ் பாண்டே, கெதர் ஜாதவ், குல்தீப் யாதவ், சஹால், புவனேஸ்வர் குமார், கலீக் அஹமது ஆகிய வீரர்கள் துபைக்குக் கிளம்பிச் சென்றுள்ளார்கள். இங்கிலாந்தில் இருந்து திரும்பிய ராகுல், தவன், பூம்ரா, பாண்டியா, தினேஷ் கார்த்திக், ஷர்துல் தாக்குர் ஆகியோர் செப்டம்பர் 16 அன்று துபைக்கு கிளம்புவார்கள். 

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை செப்டம்பர் 18 அன்று ஹாங்காங்குக்கு எதிராக விளையாடவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.