இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட தொடக்க வீரர் முரளி விஜய், தற்போது இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் எஸெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
நாட்டிங்ஹம்ஷைர் அணியுடனான ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் முரளி விஜய் 56 ரன்கள் எடுத்தார். இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் பிரமாதமாக விளையாடி, சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். 282 ரன்கள் இலக்கை முரளி விஜய்யின் சதத்தால் (100 ரன்கள்) எஸெக்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதற்கான அணி விரைவில் தேர்வு செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் போட்டிகளில் முரளி விஜய் மீண்டும் தன் திறமையை நிரூபித்து வருவதால் அவர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவாரா என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. எனினும் அத்தொடருக்கு ராகுல், பிருத்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகிய மூவருமே தொடக்க வீரர்களாகத் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”மிதுன ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

ஜிகர்தண்டா - 3 திட்டத்தில் கார்த்திக் சுப்புராஜ்!

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாது: நயினார் நாகேந்திரன்

துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


