ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐக்கிய அரபு நாடுகளின் துபை, அபுதாபி நகரங்களில் தொடங்கியுள்ளது. வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கின்றன.
இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டித் தொடர்களை இழந்த நிலையில் இந்தியா இதில் பங்கேற்கிறது. மேலும் அதிரடி பேட்ஸ்மேன், கேப்டன் கோலி இல்லாமல் இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில் கலந்து கொள்கிறது. ஆட்டச் சுமை காரணமாக கோலிக்கு ஓய்வு தரப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு ஆட்டங்கள் தொடங்கும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் போட்டிகள் ஒளிபரப்பாகும். இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை செப்டம்பர் 18 அன்று ஹாங்காங்குக்கு எதிராக விளையாடவுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி, ஆசியப் போட்டியில் கலந்துகொள்ளாதது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பியுள்ளது. ஆசியப் போட்டியில் சிறந்த வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் விராட் கோலி கலந்துகொள்ளாதது எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, விளம்பர வருவாயைப் பாதிக்கும் என எண்ணுகிறோம் என்று வருத்ததுடன் அனுப்பிய மின்னஞ்சலை பிசிசிஐக்கு அனுப்பியுள்ளது ஆசிய கிரிக்கெட் கவுன்சில்.
ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸின் இந்தக் கருத்தை பிசிசிஐ ஏற்கவில்லை. பிசிசிஐயின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரி துசித் பெரேராவுக்கு அனுப்பிய கடிதத்தில், ஆசியக் கோப்பைக்குச் சிறந்த வீரர்களைக் கொண்ட இந்திய அணியே தேர்வாகியுள்ளது. அணியைத் தேர்வு செய்யும் பொறுப்பு பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கே உண்டு. எந்த வீரரைத் தேர்வு செய்யவேண்டும் என்பதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலோ தொலைக்காட்சி நிறுவனமோ இதில் தலையிடக்கூடாது என்று பதிலடி அளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி: திண்டுக்கல் சீனிவாசன்

கம்பம் தொகுதியில் தவெக உள்பட 7 போ் வேட்புமனுத் தாக்கல்

பேரவைத் தோ்தல் நெருக்கடியில் மக்களவையை கூட்டுவதா? ப. சிதம்பரம் கண்டனம்

அறுவைச் சிகிச்சையின்றி இருதய வால்வு மாற்றம்
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


