இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

3.5 கி.மீ தூரம் ஓடிவந்து பந்துவீசிய சிறுவன்: கின்னஸ் சாதனை! (விடியோ)

கிரிக்கெட் ஆடுகளத்தில் நீண்டதூரம் ஓடி பந்துவீசுபவர் என்றால் உங்களுக்குச் சட்டென்று சோயிப் அக்தர் தான் ஞாபகம் வரும்...

News image
Updated On :28 செப்டம்பர் 2018, 12:35 pm

கிரிக்கெட் ஆடுகளத்தில் நீண்டதூரம் ஓடி பந்துவீசுபவர் என்றால் உங்களுக்குச் சட்டென்று சோயிப் அக்தர் தான் ஞாபகம் வரும்.

இனி இந்தச் சிறுவனை தான் எண்ணிப் பார்ப்பீர்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் மெளரிஸ் கிரிஃபின், ஒரு விநோத சாதனையைச் செய்துள்ளார். பந்துவீசும் முன்பு 3.767 கி.மீ. மூச்சிரைக்க ஓடிவந்து அதற்கு 26 நிமிடம் 55 நொடிகள் எடுத்துக்கொண்டு பிறகு ஆடுகளத்தில் நுழைந்து பந்துவீசியுள்ளார். இவர் ஓடிவரும் வரை பேட்ஸ்மேன்கள், ஃபீல்டர்கள், நடுவர்கள் என அனைவரும் காத்திருந்து இந்தச் சாதனைக்கு உதவியுள்ளார்கள். அடேல் கிரிக்கெட் கிளப் யு-11 - லீட்ஸ் மோடர்னியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் இந்தச் சாதனை நிகழ்ந்துள்ளது. அடேல் அணிக்காக மெளரிஸ் பங்கேற்றுள்ளார். 

அந்தச் சிறுவன், யார்க்‌ஷையர் வீதி வழியே அத்தனை தூரம் ஓடிவர, கூடவே அவருடைய தந்தையும் ஓடிவந்து ஊக்கப்படுத்தியுள்ளார். இதற்கு முன்பு 0.851 கி.மீ. ஓடிவந்து பந்துவீசியதே சாதனையாக இருந்தது. அதை இந்தச் சிறுவன் முறியடித்துள்ளார்.

இதையடுத்து மெளரிஸின் பெயர் கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளது. இதற்காக அந்த அமைப்பைச் சேர்ந்த இரு அதிகாரிகளும் சிறுவனுடன் ஓடிவந்துள்ளார்கள்.

இச்சாதனையை மேற்கொள்ள இருவாரங்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளார் மெளரிஸ். இதன் மூலம் கிடைத்த நிதியுதவியை தொண்டு அமைப்புக்கு அவர் வழங்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.