தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சென்னையின் வெற்றிநடைக்கு அணை போடுமா மும்பை?: இன்று மோதல்

தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று உற்சாகத்துடன் உள்ள சென்னையின் வெற்றிநடைக்கு தடை போடுமா மும்பை என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

News image

MI vs CSK Match 11

Updated On :3 ஏப்ரல் 2019, 6:29 am

DIN


தொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று உற்சாகத்துடன் உள்ள சென்னையின் வெற்றிநடைக்கு தடை போடுமா மும்பை என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இரு அணிகள் இடையிலான ஐபிஎல் ஆட்டம் மும்பையில் புதன்கிழமை இரவு நடைபெறவுள்ளது. சென்னை அணி தொடர்ந்து 3 வெற்றிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மும்பை அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் துவண்டுள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில் மும்பை 14, சென்னை 12 முறை வென்றுள்ளன. 
எனினும் சென்னை அணி தற்போது கேப்டன் தோனியின் அபார ஆட்டத்தால் கூடுதல் பலம் பெற்றுள்ளது. ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 27/3 என தடுமாறிக் கொண்ட அணியை தோனி அபாரமாக ஆடி 75 குவித்து வெற்றி பெறச் செய்தார். பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிஎஸ்கே ஆதிக்கம் செலுத்துகிறது. செனனை அணியில் வேகப்பந்து வீச்சை காட்டிலும் சுழற்பந்து வீச்சு வலுவாக உள்ளது. ஆனால் மும்பை மைதானம் வேகம், பவுன்சர்களுக்கு உதவியாக இருக்கும்.
அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மா, குயிண்டன் டி காக்கையே பேட்டிங்கில் அதிகம் சார்ந்துள்ளது. மற்ற வீரர்கள் சோபிக்கவிலலை. மேலும் வலுவான வேகப்பந்து வீச்சை கொண்டுள்ளது. பும்ரா, பென் கட்டிங், அஸாரி ஜோசப், மலிங்கா ஆகியோர் உள்ளனர்.
சொந்த மைதானத்தில் மும்பை அணி வெற்றி பெறுமா அல்லது சென்னை ஆதிக்கம் செலுத்துமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.