மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தக் கேட்சுக்கு ரிவ்யூவா?:  பார்வையாளர்களை அதிர வைத்த பாகிஸ்தான் வீரர் (விடியோ)  

பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தெளிவாக கேட்சை தரையில் விட்ட பின்னர், பந்தை எடுத்துக் கொண்டு மூன்றாவது நடுவரிடம் வீரர் ஒருவர் ரிவியூ கேட்டு.... 

News image
Updated On :5 ஏப்ரல் 2019, 2:15 pm

DIN

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தெளிவாக கேட்சை தரையில் விட்ட பின்னர், பந்தை எடுத்துக் கொண்டு மூன்றாவது நடுவரிடம் வீரர் ஒருவர் ரிவியூ கேட்டு கையை அசைத்தது கடும் எதிர்வினைகளை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் அணிகள் மோதிய பாகிஸ்தான் கோப்பைக்கான லீக்  போட்டி ஒன்றில் இந்த நிகழ்வு  நடந்துள்ளது. பெடரல் ஏரியாஸ் அணியும் கைபர் பதுன்கவா அணியும் மோதிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றி பெற 4 பந்துகளில் கைபர் பதுன்கவா அணிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டது.

அப்போதுதான் பேட்ஸ்மேன் வானில் தூக்கி அடித்த பந்தானது டீப் மிட்விக்கெட் பகுதியில் பீலடிங் செய்து கொண்டிருந்த அகமது ஷேஷாத் கையில் வந்தது, மிக எளிதான அந்த கேட்ச்  நழுவி, தரையில் பட்ட பந்தினை கையால் எடுத்த ஷேஷாத் அது கேட்ச் என்பதை உறுதி செய்ய 3ம் நடுவரிடம் ரிவியூ கேட்டது தற்போது சர்ச்சையாகியுள்ளது. ஆட்டத்தின் இறுதியில் கைபர் பதுன்க்வா அணியே வென்றது.

முன்னரே அவர் இலங்கைக்கு எதிரான சர்வதேச போட்டி ஒன்றிலும் இவ்வாறு செய்ததையும் ரசிகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

அவரது பல்வேறு மோசடிகள் குறித்து விடப்பட்ட தொடர் எச்சரிக்கைகளின் காரணமாகவே, 2019 உலகக்கோப்பைகான பாகிஸ்தான்  உத்தேச வீரர்கள் பட்டியலில் ஷேஷாத் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.