உலகக் கோப்பைப் போட்டிக்கான நடுவர்கள் பட்டியல் வெளியீடு!
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெறக்கூடிய 16 கள நடுவர்கள் மற்றும் ஆட்ட நடுவர்கள்...


ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இடம்பெறக்கூடிய 16 கள நடுவர்கள் மற்றும் ஆட்ட நடுவர்கள் (மேட்ச் ரெஃப்ரி) பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி.
இந்த உலகக் கோப்பையுடன் நடுவர் இயன் குட் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 2006 முதல் 74 டெஸ்டுகள், 135 ஒருநாள், 37 டி20 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். நான்காவது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் நடுவராக அவர் பணியாற்றவுள்ளார்.
கள நடுவர்கள்: அலீம் டர், குமார் தர்மசேனா, மரைஸ் எராஸ்மஸ், கிறிஸ் கஃப்பானி, இயன் குட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்பாரோ, நிஜல் லாங், ப்ரூஸ் ஆக்ஸன்ஃபோர்ட், சுந்தரம் ரவி, பால் ரீஃப்பல், ராட் டக்கர், ஜோயல் வில்சன், மைக்கேல் கோவ், ருசிரா பல்லியகுருகே, பால் வில்சன்.
ஆட்ட நடுவர்கள்: கிறிஸ் பிராட், டேவிட் பூன், ஆண்டி பைகிராஃப்ட், ஜெஃப் குரோவ், ரஞ்சன் மடுகாலே, ரிச்சி ரிச்சர்ட்சன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...