செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

ரன்கள் குவித்த ரிஷப் பந்த்: டி20 தொடரை முழுமையாக வென்ற இந்திய அணி (விடியோ)

மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது... 

News image
Updated On :7 ஆகஸ்ட் 2019, 5:05 am

எழில்

மே.இ.தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றுள்ளது. 

இந்திய அணி ஏற்கெனவே முதல் இரு டி20 ஆட்டங்களையும் வென்ற நிலையில் 3-வது டி20 ஆட்டம் கயானா பிராவிடென்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் 146/6 ரன்களைச் சேர்த்தது. பொல்லார்ட் 58, ரோவ்மேன் 32 ரன்களை விளாசினர். பின்னர் ஆடிய இந்தியா 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு ரன்களை 150 சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதல் 2 ஆட்டங்களில் சோபிக்காத இளம் வீரர் ரிஷப் பந்த் 4 சிக்ஸர், 4 பவுண்டரியுடன் 42 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். கேப்டன் கோலி  6 பவுண்டரியுடன் 59 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் வியாழன் முதல் தொடங்குகிறது. 3 ஒருநாள் ஆட்டங்களும் இந்திய நேரம் இரவு 7 மணிக்குத் தொடங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.