47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விராட் கோலியின் 42-வது ஒருநாள் சதமும் மலைக்க வைக்கும் சாதனைகளும்!

42-வது ஒருநாள் சதமெடுத்த விராட் கோலி, அதன்மூலமாக நிகழ்த்திய சாதனைகள்...

News image
Updated On :12 ஆகஸ்ட் 2019, 7:08 am

எழில்

மே.இ.தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் டிஎல் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. 

இரு அணிகளுக்கு இடையில் டி20, ஒருநாள், டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரை இந்தியா 3-0 என கைப்பற்றியது. முதல் ஒருநாள் ஆட்டம் மழையால் முடிவின்றி கைவிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை இரவு 2-ஆவது ஒருநாள் போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 7விக்கெட் இழப்புக்கு 279 ரன்களைக் குவித்தது. கேப்டன் கோலி 120, ஷிரேயஸ் ஐயர் 71 ரன்களை விளாசினர்.

மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டு மே.இ. தீவுகள் அணிக்கு 46 ஓவர்களில் 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சால் மே.இ. தீவுகள் அணி 42 ஓவர்களில் 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. லூயிஸ் அதிகபட்சமாக 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் புவனேஸ்வர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த ஆட்டத்தில் 42-வது ஒருநாள் சதமெடுத்த விராட் கோலி, அதன்மூலமாக நிகழ்த்திய சாதனைகள்:

அதிக ஒருநாள் ரன்கள்: இந்தியர்கள்

சச்சின் - 18, 426 ரன்கள்
கோலி - 11,406 ரன்கள்
கங்குலி - 11,363 ரன்கள்

அதிக ஒருநாள் ரன்கள்

1.சச்சின் - 18, 426 ரன்கள்
2.சங்கக்காரா - 14,234 ரன்கள்
3.பாண்டிங்- 13,704 ரன்கள்
8. கோலி - 11406 ரன்கள்

அதிக ஒருநாள் சதங்கள் 

49 சச்சின் டெண்டுல்கர் (452 இன்னிங்ஸ்) 
42 விராட் கோலி (229 இன்னிங்ஸ்) 
30 ரிக்கி பாண்டிங் (365 இன்னிங்ஸ்)

விராட் கோலியின் 41 ஒருநாள் சதங்கள்

8 vs ஆஸ்திரேலியா, இலங்கை, மே.இ. 
5 vs நியூஸிலாந்து 
4 vs தென் ஆப்பிரிக்கா 
3 vs இங்கிலாந்து, வங்கதேசம் 
2 vs பாகிஸ்தான் 
1 vs ஜிம்பாப்வே

42-வது ஒருநாள் சதம்

சச்சின் - 406 இன்னிங்ஸ்
விராட் கோலி - 229 இன்னிங்ஸ்

* மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் - சுனில் கவாஸ்கர் (2749 ரன்கள்), அந்த அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலியும் (2032 ரன்கள்) டி20-யில் ரோஹித் சர்மாவும் (425 ரன்கள்) அதிக ரன்கள் எடுத்துள்ளார்கள்.

* ஓர் அணிக்கு எதிராக குறைந்த இன்னிங்ஸில் 2000 ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி. 34 இன்னிங்ஸில் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2000 ரன்கள் எடுக்க ரோஹித் சர்மாவுக்கு 37 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. 

ஓர் அணிக்கு எதிராக அதிக சதங்கள் எடுத்த வீரர்கள்

சச்சின் டெண்டுல்கர் - 9 ( vs ஆஸ்திரேலியா)
விராட் கோலி - 8 ( vs மே.இ. தீவுகள்)
விராட் கோலி - 8 ( vs இலங்கை)
விராட் கோலி -  8 ( vs ஆஸ்திரேலியா)
சச்சின் - 8 ( vs இலங்கை)

* மே.இ. தீவுகள்  அணிக்கு எதிராக கடந்த 8 இன்னிங்ஸில் 5 சதங்கள் எடுத்துள்ளார் கோலி. அந்த அணிக்கு எதிராக 72.57 ரன்கள் சராசரியாக வைத்துள்ளார்.

ஒவ்வொரு அணிக்கும் எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்

இங்கிலாந்து: கெய்ல் (1632)
ஆஸ்திரேலியா: டெண்டுல்கர் (3077)
தென் ஆப்பிரிக்கா: டெண்டுல்கர் (2001)
மே.இ. தீவுகள்: கோலி  (1931*)
நியூஸிலாந்து: பாண்டிங் (1971)
இந்தியா: ஜெயசூர்யா (2899)
பாகிஸ்தான்: டெண்டுல்கர் (2526)
இலங்கை: டெண்டுல்கர் (3113)
ஜிம்பாப்வே: கெய்லே (1549)
வங்கதேசம்: பி டெய்லர் (1377)

ஒரு கேப்டனின் கீழ் அதிக சதங்கள் எடுத்த இந்திய வீரர்கள்

20 - விராட் கோலி (கேப்டனாக)
19 - விராட் கோலி (தோனியின் தலைமையின் கீழ்)
18 - சச்சின் (அசார் தலைமையின் கீழ்)
16 - ரோஹித் சர்மா (கோலி தலைமையின் கீழ்)

ஒவ்வொரு கேப்டனின் கீழ் கோலி எடுத்த சதங்கள்

20 - தன்னுடைய தலைமையின் கீழ்
19 -தோனி
2 - சேவாக்
1 - கம்பீர்

* இது சுவாரசியமான புள்ளி விவரம். உலகக் கோப்பை போட்டிகள் கோலி சதமெடுக்கும் வேகத்தைக் குறைக்கின்றன. 2015 உலகக் கோப்பை சமயத்தில் விராட் கோலியால் 13 இன்னிங்ஸில் சதமெடுக்காமல் இருந்தார் கோலி. அதேபோல, கடைசியாக இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், 3-வது ஆட்டதில் சதமெடுத்தார் விராட் கோலி. அதன்பிறகு 11 இன்னிங்ஸில் அவர் சதம் எதுவும் எடுக்கவில்லை. உலகக் கோப்பையில் விளையாடிய 9 இன்னிங்ஸிலும் அவரால் ஒரு சதமும் எடுக்கமுடியவில்லை. எப்படியே நேற்றைய சதத்தின் மூலம் இந்தக் குறையைப் போக்கிவிட்டார். எப்போது அதிக இன்னிங்ஸில் கோலியால் சதமெடுக்க முடியவில்லை என்பது தெரியுமா? 2011 பிப்ரவரி 27 முதல் 11 செப்டம்பர் வரை 17 இன்னிங்ஸ் விளையாடிய கோலி ஒரு சதமும் எடுக்கவில்லை. ஆனால் இந்த இடைவெளியை அடுத்தடுத்த வருடங்களில் மிகவும் குறைத்துவிட்டார். அதனால் தான் இவ்வளவு வேகத்தில் அவரால் 42 சதங்கள் எடுக்கமுடிந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.