டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாடுவார்: உறுதியளிக்கும் பிரபல சிஎஸ்கே வீரர்!

நிச்சயமாக விளையாடுவார் என்று உறுதியளிக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ...
டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாடுவார்: உறுதியளிக்கும் பிரபல சிஎஸ்கே வீரர்!
Updated on
1 min read

அடுத்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையில் தோனி விளையாடுவாரா? இந்திய ரசிகர்களிடையே உள்ள முக்கியமான கேள்வி இதுதான்.

நிச்சயமாக விளையாடுவார் என்று உறுதியளிக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் டுவைன் பிராவோ. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

தோனி ஒருபோதும் ஓய்வு பெறவில்லை. எனவே அவர் டி20 உலகக் கோப்பையில் நிச்சயம் விளையாடுவார். கிரிக்கெட்டுக்கு வெளியே நடக்கும் விஷயங்கள் தன்னைப் பாதிக்கும்படி நடந்துகொள்ள மாட்டார். எங்களுக்கும் அதையே கற்றுக்கொடுத்துள்ளார். தடுமாற்றமடையாமல் நம் திறமை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பார் என்று பேட்டியளித்துள்ளார்.

அக்டோபர் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டுவைன் பிராவோ. 2004-ல் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 36 வயதான பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதாலும் காயங்கள் காரணமாகவும் கிரிக்கெட் சங்கத்துடனான மோதல்களாலும் அவரால் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாட முடியாமல் போய்விட்டது. ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகக் கடந்த அக்டோபர் மாதம் அவர் அறிவித்தார். இந்நிலையில் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார் பிராவோ. அதற்கான காரணத்தை அவர் கூறியுள்ளதாவது: மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வர முடிவெடுத்துள்ளேன். பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், கேப்டன் கிரோன் பொலார்ட் ஆகியோரால் மீண்டும் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன். என்னைத் தேர்வு செய்தபிறகு மே.இ. தீவுகளின் டி20 அணிக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com