சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தென் ஆப்பிரிக்க டி20 அணியில் டி வில்லியர்ஸ்: பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தெ.ஆ. கேப்டன் பேட்டி!

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார்.

News image
Updated On :17 டிசம்பர் 2019, 11:42 am

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் விக்கெட் கீப்பா் மாா்க் பௌச்சா் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளாா். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, டி20 போட்டிகளில் விளையாடி வரும் பிரபல வீரர் டி வில்லியர்ஸை மீண்டும் தென் ஆப்பிரிக்க அணியில் இடம்பெற வைத்து, டி20 உலகக் கோப்பையில் விளையாட வைக்கவுள்ளதாக அவர் கூறினார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸும் பெளச்சரின் கருத்தை ஏற்றுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

டி வில்லியர்ஸ் மீண்டும் தென் ஆப்பிரிக்க அணிக்குத் திரும்ப வேண்டும் என மக்கள் எண்ணுகிறார்கள். நானும் அவ்வாறே எண்ணுகிறேன். இதுகுறித்து அவருடன் கடந்த 2, 3 மாதங்களாகப் பேசி வருகிறோம் என்று பேட்டியளித்துள்ளார். 

கடந்த வருடம் மே 23 அன்று, சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்தார். 34 வயது டி வில்லியர்ஸ் தன்னுடைய திடீர் ஓய்வு அறிவிப்பை சமூகவலைத்தளம் வழியாக அறிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.