இந்த வருடம் அதிக ஒருநாள் ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள வீரர்கள்:
1. விராட் கோலி - 1292 ரன்கள்
2. ரோஹித் சர்மா - 1268 ரன்கள்
3. ஷாய் ஹோப் - 1225 ரன்கள்
டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளார் ஷாய் ஹோப். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஒரு பேட்ஸ்மேனாக, அணியின் வெற்றிக்கு ரன்கள் எடுப்பதில் தான் திருப்தி அடங்கியுள்ளது. அதேசமயம், இருவரையும் சீக்கிரம் வீழ்த்திவிட்டு, அதிக ரன்கள் எடுத்து, இந்த வருடப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் 102 ரன்கள் எடுத்துள்ளார் ஹோப்.
விசாகப்பட்டினம் ஆடுகளம் குறித்து ஹோப் கூறியதாவது: பேட்டிங்குக்குச் சாதகமான ஆடுகளமாக உள்ளது. பந்தை எளிதில் அடித்து ஆட முடியும். ரன்கள் எடுக்கச் சுலபமாக இருக்கும் என்பதால் பந்துவீச்சாளர்களுக்குச் சவாலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பச்சைப் பட்டாணி மசாலா ஃப்ரை

உக்ரைனில் ரஷியா வான்வழி தாக்குதல்

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


