ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி யார் யாரைத் தேர்வு செய்ய வேண்டும்?

இதற்கு மேல் அணியைப் பலப்படுத்த சிஎஸ்கே அணி என்ன செய்ய வேண்டும்? இதுதான் சிஎஸ்கே ரசிகர்களிடையே உள்ள கேள்வி... 
ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி யார் யாரைத் தேர்வு செய்ய வேண்டும்?
Updated on
1 min read

2018-ல் ஐபிஎல் சாம்பியன், 2019-ல் 2-ம் இடம். இதற்கு மேல் அணியைப் பலப்படுத்த சிஎஸ்கே அணி என்ன செய்ய வேண்டும்? இதுதான் சிஎஸ்கே ரசிகர்களிடையே உள்ள கேள்வி. 

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் நாளை நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 332 வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2019 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்ற 5 வீரர்கள் சமீபத்தில் விடுவிக்கப்பட்டார்கள். இந்நிலையில் நாளைய ஏலத்தில் சிஎஸ்கே அணியால் 2 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 5 வீரர்களைத் தேர்வு செய்ய முடியும். கைவசம் ரூ. 14.60 கோடி மட்டுமே உள்ளதால் அதிக தொகைக்கு வீரர்களைத் தேர்வு செய்வதில் சிக்கல் உள்ளது. இதனால் பிரபல வீரர்களைத் தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது சிஎஸ்கே. 

கடந்த இரு வருடங்களும் சிறப்பாக விளையாடியபோதும் சிஎஸ்கே அணியிடமும் சில பலவீனங்கள் உள்ளன. அதைச் சரிசெய்ய ஒரே வழி, ஏலத்தில் சில வீரர்களைத் தேர்வு செய்து, அக்குறைகளைச் சரி செய்வது தான். 

சிஎஸ்கே அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக உள்ளதாகவே பலரும் கருதுகிறார்கள். கடந்த வருடம் தோனி சிறப்பாக விளையாடியதால் இறுதிச்சுற்று வரை முன்னேற முடிந்தது. தோனி மட்டுமே 400 ரன்களைத் தாண்டினார். 2019-ல், அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் 12 இடங்களில் ஒரு சிஎஸ்கே வீரரும் இல்லை. இந்நிலையில் பேட்டிங்கைப் பலப்படுத்த வேண்டிய நிலைமையில் உள்ளது சிஎஸ்கே அணி.

இதனால் கிறிஸ் லின், ஜேசன் ராய் போன்ற வெளிநாட்டு வீரர்களையோ அல்லது ரோஹன் கடம், விராட் சிங் போன்ற இந்திய வீரர்களையோ சிஎஸ்கே தேர்வு செய்யவேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக வீரர் ஷாருக் கான், கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடக் கூடியவர் என்பதால் அவரையும் தேர்வு செய்ய சிஎஸ்கே முயற்சி செய்யும் எனத் தெரிகிறது. 

இடக்கை வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனாட்கட்டை சிஎஸ்கே தேர்வு செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன. மேலும் ஆல்ரவுண்டர்களான கிறிஸ் மோரிஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோரையும் தேர்வு செய்ய கடுமையாகப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com