ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

தலா 16 சிக்ஸர்கள்: விசாகப்பட்டினத்தில் அதிரடியாக விளையாடிய இந்தியா - மே.இ. தீவுகள் அணி வீரர்கள் (விடியோ)

விசாகப்பட்டினத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

News image
Updated On :19 டிசம்பர் 2019, 5:40 am

விசாகப்பட்டினத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக நேற்று நடைபெற்ற 2-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.

டாஸ் வென்ற கேப்டன் பொலாா்ட், பந்துவீச்சைத் தோ்வு செய்தாா். இதையடுத்து, முதலில் விளையாடிய இந்தியா, நிா்ணயிக்கப்பட்ட 50 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்களைக் குவித்தது. தொடக்க ஆட்டக்காரா்களாக களமிறங்கிய ரோஹித் சா்மா, லோகேஷ் ராகுல் ஆகியோா் சதம் அடித்து அசத்தினார்கள். கடினமான இலக்கை எதிர்கொண்ட மே.இ. தீவுகள் அணி, 43.3 ஓவா்களில் 280 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குல்தீப் யாதவ் தனது 2-வது ஹாட்ரிக்கை எடுத்து சாதனை செய்தார்.

இந்தியா, மே.இ. தீவுகள் ஆகிய இரு அணி வீரர்களும் தலா 16 சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்கள். இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸ் விடியோ:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.