ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஐபிஎல் ஏலத்தில் தேர்வாகப் போகும் தமிழக வீரர்கள் யார் யார்?: ரசிகர்கள் ஆர்வம்!

றைந்தது நான்கு தமிழக வீரர்களாவது ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

News image
Updated On :20 டிசம்பர் 2019, 6:17 am

ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் 338 வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். 

இந்த ஏலத்தில் 10 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள். ஏற்கெனவே ஐபிஎல்-லில் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள். இந்நிலையில் மேலும் குறைந்தது நான்கு தமிழக வீரர்களாவது ஐபிஎல் ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் 2020 ஏலத்தில் பங்குபெறவுள்ள 10 தமிழக வீரர்கள்

1. வருண் சக்கரவர்த்தி - ரூ. 30 லட்சம் (அடிப்படை விலை)
2. ஷாருக் கான் - ரூ. 20 லட்சம்
3. சாய் கிஷோர் - ரூ. 20 லட்சம்
4. எம். சித்தார்த் - ரூ. 20 லட்சம் 
5. ஹரி நிஷாந்த் - ரூ. 20 லட்சம்
6. பெரியசாமி - ரூ. 20 லட்சம் 
7. மணிகண்டன் - ரூ. 20 லட்சம்
8. பாபா அபராஜித் - ரூ. 20 லட்சம் 
9. முகமது - ரூ. 20 லட்சம் 
10. அபினவ் - ரூ. 20 லட்சம்

ஐபிஎல் 2020 போட்டிக்கான அணிகளில் பங்குபெற்றுள்ள தமிழக வீரர்கள் 

1. ஆர். அஸ்வின் - தில்லி - ரூ. 7.60 கோடி
2. தினேஷ் கார்த்திக் - கொல்கத்தா - ரூ. 7.40 கோடி
3. விஜய் சங்கர் - ஹைதராபாத் - ரூ. 3.20 கோடி
4. வாஷிங்டன் சுந்தர் - பெங்களூர் - ரூ. 3.20 கோடி
5. முரளி விஜய் - சென்னை - ரூ. 2 கோடி
6. நடராஜன் - ஹைதராபாத் - ரூ. 40 லட்சம்
7. ஜெகதீசன் - சென்னை - ரூ. 20 லட்சம்
8. எம். அஸ்வின் - பஞ்சாப் - ரூ. 20 லட்சம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.