200-வது ஒருநாள் ஆட்டத்தை விளையாடி உலக சாதனை நிகழ்த்திய மிதாலி ராஜ்!
மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், புதிய உலக சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார்.


மகளிர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள இந்திய ஒருநாள் அணி கேப்டன் மிதாலி ராஜ், புதிய உலக சாதனையை இன்று நிகழ்த்தியுள்ளார்.
ஹேமில்டனில் நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட்டில் பங்கேற்றதன் மூலம் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 200 ஒருநாள் ஆட்டங்களை விளையாடிய முதல் வீராங்கனை என்கிற சாதனையை நிகழ்த்தியுள்ளார் மிதாலி ராஜ்.
1999-ம் ஆண்டு தனது முதல் ஒருநாள் கிரிக்கெட்டை விளையாடிய மிதாலி ராஜ், 20 வருடங்களாக விளையாடி இச்சாதனையைப் புரிந்துள்ளார். மிதாலிக்கு அடுத்ததாக இங்கிலாந்தின் சார்லோட்டே எட்வர்ட்ஸ் 191 ஆட்டங்கள் விளையாடி 2017-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...