நாளைய ஒருநாள் ஆட்டத்தில் தோனி விளையாடவுள்ளார்: ஷுப் மன் கில்லுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
காயம் காரணமாக கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்காமல் இருந்த தோனி...


நான்காவது ஒரு நாள் ஆட்டத்தில் 92 ரன்களில் இந்தியாவை சுருட்டி, நியூஸிலாந்தி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது. நியூஸிலாந்தில் ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்று ஆடி வரும் இந்திய அணி ஏற்கெனவே 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பற்றி, 3-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி ஒருநாள் ஆட்டம், வெல்லிங்டனில் நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் காயம் காரணமாக கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்காமல் இருந்த தோனி, உடற்தகுதியை அடைந்துவிட்டார் என பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார். இதனால் தோனியின் பங்கேற்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 4-வது ஒருநாள் ஆட்டத்தில் விளையாடிய 19 வயது வீரர் ஷுப்மன் கில், நாளைய ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று அறியப்படுகிறது. அல்லது அவர் விளையாடும்பட்சத்தில் தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து நீக்கப்படலாம். ரோஹித் சர்மாவின் என்ன முடிவெடுக்கிறார் என்பது நாளைதான் தெரியவரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...