பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஹார்திக் பாண்டியா, கே.எல்.ராகுல், கரண் ஜோஹர் மீது வழக்குப் பதிவு

பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. 

News image
Updated On :6 பிப்ரவரி 2019, 9:55 am

Raghavendran

காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் பாண்டியா, ராகுல் ஆகியோர் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்துகள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின. பல்வேறு தரப்பினர் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

ஆஸ்திரேலியாவில் இருந்த இருவரும் உடனே நாடு திரும்ப பிசிசிஐ உத்தரவிட்டது. இருவர் மீதான விசாரணை முடியும் வரை சஸ்பெண்ட் செய்வதாக கடந்த 11-ஆம் தேதி பிசிசிஐ அறிவித்தது. 

இதுதொடர்பாக விசாரணை நடத்த தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ சிஓஏ  மனு செய்தது. 

பிப்ரவரி 5-ஆம் தேதி தான் இதுதொடர்பாக விசாரணை நடத்த இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. அணியின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவதால், இதற்கிடையே விசாரணை நடைபெறும் வரை இருவர் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்யலாம் என பிசிசிஐ தற்காலிக தலைவர் சிகே.கன்னா கருத்து தெரிவித்திருந்தார். 

மேலும் இதுதொடர்பாக சட்ட ஆலோசகர் பிஎஸ்.நரசிம்மாவுடன் சிஓஏ ஆலோசனை மேற்கொண்டனர். எனவே தீர்ப்பாயம் நியமிக்கப்படும் வரை இருவர் மீதான சஸ்பெண்ட்  நடவடிக்கை உடனே ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து ஹார்திக் பாண்டியா, நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் உடனடியாக இணைந்தார். அதே நேரத்தில் ராகுல், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி 3 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணியில் இடம்பெற்றார்.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற காபி வித் கரண் நிகழ்ச்சி தொடர்பாக கரண் ஜோஹர், ஹார்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் மீது ராஜஸ்தானின் ஜோத்பூர் காவல்நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.