இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: ரோஹித் சர்மா சாதனை

இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100-வது சிக்ஸரையும் அவர் அடித்தார்.

News image
Updated On :8 பிப்ரவரி 2019, 9:05 am

எழில்

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் 2-வது டி20 ஆட்டத்தில் புதிய சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.

இன்று சிறப்பாக விளையாடிய நிலையில் 33 ரன்களில் இருந்தபோது ஒரு சிக்ஸர் அடித்தார் ரோஹித் சர்மா. அப்போது டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்கிற பெருமையை அடைந்தார். இதற்கு முன்பு நியூஸிலாந்தின் மார்டின் கப்தில் 2272 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார். அதைத் தாண்டியுள்ளார் ரோஹித் சர்மா. இந்த ஆட்டத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் 2288 ரன்கள் எடுத்துள்ளார்.  

மேலும் இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 100-வது சிக்ஸரையும் அவர் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் கிறிஸ் கெயிலும் மார்டின் கப்திலும் 103 சிக்ஸர் அடித்து முதலிடத்தில் உள்ளார்கள். 102 சிக்ஸருடன் 2-வது இடத்தில் உள்ளார் ரோஹித் சர்மா. 

டி20 கிரிக்கெட்: அதிக ரன்கள்

ரோஹித் சர்மா: 2288 ரன்கள்
கப்தில் - 2272
சோயிப் மாலிக் - 2263
விராட் கோலி - 2167
மெக்கல்லம் - 2140

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.