தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

துளிகள்..

துளிகள்..

Updated On :14 பிப்ரவரி 2019, 1:07 am IST

    முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அமித் பண்டாரி மீதான தாக்குதலில் தொடர்புடையவராக குற்றம்சாட்டப்பட்ட இளம் வீரர் அனுஜ் தேதாவுக்கு வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட தில்லி கிரிக்கெட் சங்கம் தடை விதித்தது.


    உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மொயீன் கான் தெரிவித்தார். ஜூன் 16ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் மோதுகிறது.


    கேரள மாநிலம், கொச்சியில் புதன்கிழமை நடைபெற்ற புரோ கைப்பந்து போட்டியின் 12ஆவது லீக் ஆட்டத்தில் காலிகட் ஹீரோஸ் 4-1 என்ற கணக்கில் ஆமதாபாத் டிஃபென்டர்ஸை வீழ்த்தியது. 


    இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில், முதல் இன்னிங்ஸின் 2ஆவது நாள் ஆட்ட நேர முடிவில் விதர்பா அணி 6 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்துள்ளது. ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியைவிட 85 ரன்கள் பின்தங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.