துப்பாக்கிச் சுடுதல்: தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை!
துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டேலா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்...


துப்பாக்கிச் சுடுதல் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய வீராங்கனை அபூர்வி சண்டேலா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
புதுதில்லியில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வரும் 2020 டோக்கியா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான 16 இடங்கள் உள்ளன. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற மகளிர் 10 மீ. ஏர் ரைஃபிள் போட்டியில் இந்தியாவின் 26 வயது அபூர்வி சண்டேலா தங்கம் வென்று அசத்தினார். இறுதிச்சுற்றில் 252.9 புள்ளிகளை அடைந்து புதிய உலக சாதனையையும் அவர் படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...