2 விக்கெட்டுகளில் புதிய சாதனை படைக்கவுள்ள பும்ரா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஜஸ்ப்ரித் பும்ராவின் பந்துவீச்சை யாராலும் மறக்கமுடியாது...


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் ஜஸ்ப்ரித் பும்ராவின் பந்துவீச்சை யாராலும் மறக்கமுடியாது. இந்நிலையில் புதிய சாதனை படைக்கத் தயாராகிவிட்டார் பும்ரா.
முதல் டி20 ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா, 50 சர்வதேச டி20 விக்கெட்டுகளை எட்டினார். இதையடுத்து டி20 கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகள் எடுத்த 2-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.
இந்நிலையில் இன்னும் 2 விக்கெட்டுகள் எடுத்தால் அதிக டி20 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையை அடைவார் பும்ரா. அஸ்வின் 46 டி20 ஆட்டங்களில் 52 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். பும்ரா 41 ஆட்டங்களில் 51 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். எனவே இன்னும் 2 விக்கெட்டுகள் எடுத்தால் அவர் புதிய சாதனை படைத்துவிடுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 ஆட்டம் பெங்களூரில் நாளை நடைபெறவுள்ளது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தானின் சாஹித் அஃப்ரிடி 99 ஆட்டங்களில் 98 விக்கெட்டுகள் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...