திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனைகனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுசட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை2026-27 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.2% வரை உயரும் : ‘இஒய்’ நிறுவனம் கணிப்புகடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
/

கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி: தென் ஆப்பிரிக்க அணியை விட்டு ஒரேடியாக விலகி கவுண்டி கிரிக்கெட்டில் இணைந்த திறமையான வீரர்!

26 வயது தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டுயன்னே ஒலிவீயே எடுத்துள்ள ஒரு முடிவு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது...

News image
Updated On :31 ஜனவரி 2024, 7:15 am

எழில்

26 வயது தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டுயன்னே ஒலிவீயே எடுத்துள்ள ஒரு முடிவு கிரிக்கெட் உலகில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

2017-ல் தென் ஆப்பிரிக்க அணியில் அறிமுகமான ஒலிவீயே, இதுவரை10 டெஸ்டுகளில் 48 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த டிசம்பரில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 டெஸ்டுகளில் 24 விக்கெட்டுகளை எடுத்து தொடர் நாயகன் விருது பெற்றார். ஐசிசி தரவரிசையில் 19-ம் இடமும் பிடித்து கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் யார்க்‌ஷைர் கவுண்டி அணியில் 3 வருட ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார் ஒலிவீயே. கொல்பாக் என்கிற விதிமுறையின்படி அவர் கவுண்டி அணியில் இணைந்துள்ளார். கொல்பாக் விதிமுறையின்படி வெளிநாட்டு வீரர்கள், கவுண்டி கிரிக்கெட் ஆட்டங்களில் உள்ளூர் வீரர்களுக்கான சலுகைகளுடன் பங்கேற்கமுடியும். வெளிநாட்டு வீரர்கள் என்கிற பிரிவின் கீழ் இவர்கள் இடம்பெறமாட்டார்கள். 2004-ல் தென் ஆப்பிரிக்க வீரர் ஹேண்டர்சன் கொல்பாக் விதிமுறையின்படி கவுண்டி கிரிக்கெட்டில் இணைந்து தன்னுடைய சர்வதேச கிரிக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்போது அதே வழியை ஒலிவீயேவும் பின்பற்றியுள்ளார். 

கடந்த வருடம் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடியபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். இதனால் இங்கு என்னால் தொடர்ந்து அதுபோல விளையாடமுடியும் எனத் தோன்றுகிறது. முதலில் ஒரு வெளிநாட்டு வீரராகத்தான் அணியில் இடம்பெற நினைத்தேன். ஆனால் கொல்பாக் விதிமுறையின்படி நீண்ட நாள் ஒப்பந்தம் கிடைக்கும்போது இதுவே எனக்கும் என் குடும்பத்துக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என எண்ணினேன். எனினும் இந்த முடிவை எடுக்க நான் மிகவும் சிரமப்பட்டேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.