1968-க்கு பின் (Open Era) 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இரண்டு முறை வென்ற ஓரே வீரர் என்ற சாதனையை படைக்கும் முனைப்பில் உள்ளார் உலகின் இரண்டாம் நிலை வீரர் ரபேல் நடால்.
உலகின் பணக்கார விளையாட்டுகளில் ஒன்றான டென்னிஸில் ஆண்டுதோறும் 4 மேஜர்கள் எனப்படும் ஆஸி. ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓபன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஜனவரியில் ஆஸி. ஓபன், மே, ஜூன் மாதத்தில் பிரெஞ்சு ஓபன், ஜூன், ஜூலையில் விம்பிள்டன், ஆகஸ்ட், செப்டம்பரில் யுஎஸ் ஓபன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் மிகவும் பழமையானது விம்பிள்டன் (1877), யுஎஸ் ஓபன் (1881), பிரெஞ்சு ஓபன் (1891), ஆஸி. ஓபன் (1905) தொடங்கப்பட்டவையாகும்.
ஓரே சீசன் ஆண்டில் நான்கு போட்டிகளிலும் வென்றால் கிராண்ட்ஸ்லாம் வென்றதாக கருதப்படும். ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸில் தங்கம் வென்றிருந்தார், அது கோல்டன் கிராண்ட்ஸ்லாம் எனப்படும். மேலும் ஆடவருக்கான ஏடிபி வேர்ல்ட் பைனல்ஸ், மற்றும் பெண்களுக்கான டிபிள்யுடிஏ வேர்ல்ட் டூர் பைனல்ஸ் போட்டியையும் சேர்த்து வென்றிருந்தால் அது சூப்பர் ஸ்லாம் எனப்படும். கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்கள் மொத்தம் 17 பேர். இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ராட் லேவர் 2 முறையும், மகளிர் ஒற்றையர் பிரிவில் மார்க்கரெட் கோர்ட் 3 முறையும் வென்றுள்ளனர்.
ரபேல் நடால்: ஸ்பெயினைச் சேர்ந்த நடால் கடநத 1986-இல் ஜூன் மாதம் பிறந்தார் . 8 வயதில் டென்னிஸ் ஆட பயிற்சி மேற்கொண்ட நடால், 12 வயதான போது, ஸ்பானிஷ் மற்றும் ஐரோப்பிய டென்னிஸ் போட்டியில் வென்றார். 2005-இல் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். அதைத் தொடர்ந்து 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இதில் அதிகபட்சமாக பிரெஞ்சு ஓபனில் 11 முறையும், 3 முறை யுஎஸ் ஓபன், 2விம்பிள்டன் பட்டம் மற்றும் ஒரு ஆஸி. ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். இது தவிர 33 ஏடிபி பட்டங்கள், 20 வேல்ர்ட் 500 போட்டி பட்டங்கள், வென்றுள்ளார்,
11 முறை பிரெஞ்சு ஓபன்: களிமண் தரையில் நடத்தப்படும் பிரெஞ்சு ஓபன் போட்டியில் 11 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால், அதிகபட்சமாக ஒரே கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பட்டம் வென்றவர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் இரட்டை தங்கம்: மேலும் ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்ற ஓரே வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். 2008-இல் பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ஒற்றையர் பிரிவில் தங்கமும், 2016 ரியோ ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் சக வீரர் மார்க் லோபஸுடன் இணைந்து தங்கம் வென்றார்.
4 கிராண்ட்ஸ்லாம்களை வென்ற இளம் வீரர்: அதே நேரத்தில் 19 வயதில் பிரெஞ்சு ஓபன், 2010-இல் ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், யுஎஸ் ஓன் போட்டிகளை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். களிமண் மைதானத்தில் முடிசூடா மன்னனாக உள்ள ரபேல் நடால் தற்போது ஆஸி. ஓபன் 2019 போட்டியில் 10 ஆண்டுகள் கழித்து 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளார். அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ள நடால் இதில் பட்டம் வென்றால் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற முதல் வீரர் சாதனையை படைப்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்

புயல் சின்னம்: அடுத்த 2 மணி நேரத்துக்கு 4 மாவட்டங்களில் மழை!
தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!

கனரா வங்கி லாபம் 10% குறைவு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

