இந்தியாவைப் போல ஜெயிக்க வேண்டும் என்கிற கனவு தகர்ந்தது: ஆஸி.க்கு எதிராக இன்னிங்ஸ் தோல்வி கண்ட இலங்கை அணி!
ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்...


இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதால் தங்களாலும் அதுபோல ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தமுடியும் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்திய இலங்கை அணி, முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியை அடைந்துள்ளது.
பிரிஸ்பேனில் நடைபெற்ற பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணி முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டிக்வெல்லா 64 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி, 323 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றது. இதையடுத்து 2-வது இன்னிங்ஸில் 139 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்களில் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது இலங்கை அணி. ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...