சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

புஜாராவை வீழ்த்த முயற்சி செய்வேன்: உமேஷ் யாதவின் ரஞ்சி இறுதி ஆட்டத்துக்கான திட்டங்கள்!

இறுதிப் போட்டியில் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்துவது சவாலாக இருக்கும் என்று...

News image
Updated On :30 ஜனவரி 2019, 12:25 pm

எழில்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் செளராஷ்டிரம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கர்நாடகத்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இதையடுத்து செளராஷ்டிரம் - விதர்பா இடையிலான ரஞ்சி இறுதி ஆட்டம் நாகபுரியில் பிப்ரவரி 3 அன்று தொடங்கவுள்ளது. 

இந்நிலையில், இறுதிப் போட்டியில் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்துவது சவாலாக இருக்கும் என்று விதர்பா வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

புஜாராவுக்குப் பந்துவீசுவது மிகவும் சவாலானது. சிறிது நேரம் களத்தில் நின்றுவிட்டால் பிறகு அவரை வீழ்த்துவது கடினம். பிறகு விடாமல் ரன்கள் குவித்துக்கொண்டே இருப்பார். எனவே அவரை வீழ்த்த முயற்சி செய்வேன். அவரை ஆரம்பத்திலேயே வீழ்த்திவிடுவது அணிக்கு நல்லது. அவரை வீழ்த்தமுடியாவிட்டால் மற்ற பேட்ஸ்மேன்களை வீழ்த்த முயற்சி செய்வோம். எவ்வளவுதான் தனியாக விளையாடிக் கொண்டிருப்பார் புஜாரா? மறுமுனையில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்துவது எங்களுக்குச் சிரமமானதல்ல. புஜாரா குறைவாக ரன் சேர்க்கவேண்டும். அதுதான் எங்கள் திட்டம் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.