4-வது ஒருநாள்: இந்திய அணி 92 ரன்களுக்குச் சுருண்டது! வெற்றியை நெருங்கும் நியூஸிலாந்து!
நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 92 ரன்களுக்குச் சுருண்டது...


நியூஸிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 92 ரன்களுக்குச் சுருண்டது.
ஹேமில்டனில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வேகப்பந்துவீச்சாளர் போல்ட்டின் அற்புதமான பந்துவீச்சினால் இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சாஹல் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் 47 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்கள் எடுத்தார். புதுமுகம் ஷுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ரோஹித் சர்மாவும் 7 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சியே கிடைத்தது. நியூஸி. வீரர் போல்ட் 5 விக்கெட்டுகளையும் கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
நியூஸிலாந்து அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்து வெற்றியை நெருங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...