சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

4-வது ஒருநாள்: மோசமான தோல்வியை அடைந்த இந்திய அணி! 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது... 

News image
Updated On :31 ஜனவரி 2019, 5:39 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 

5 ஒரு நாள் ஆட்டம், 3 டி20 ஆட்டங்களில் விளையாட இந்திய அணி நியூஸிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த அணிக்கு எதிராக 3 ஒரு நாள் ஆட்டங்களில் கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டது. இந்நிலையில், நான்காவது ஒரு நாள் ஆட்டம் ஹேமில்டனில் இன்று நடைபெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் எனத் தொடர்ந்து பல போட்டிகளில் இடைவிடாது விளையாடி வந்ததால் கேப்டன் கோலிக்கு அணி நிர்வாகம் நியூஸி.க்கு எதிராக கடைசி 2 ஒரு நாள் ஆட்டங்களிலும், 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடுவதிலிருந்து ஓய்வு அளித்துள்ளது. 200-வது ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடியுள்ள துணை கேப்டன் ரோஹித் சர்மா இன்று இந்திய அணியைத் தலைமையேற்று வழிநடத்தினார். 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. வேகப்பந்துவீச்சாளர் போல்ட்டின் அற்புதமான பந்துவீச்சினால் இந்திய அணி எதிர்பாராத விதத்தில் 30.5 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் 40 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தபோதே இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிட்டது. சாஹல் அதிகபட்சமாக 18 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் 47 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்கள் எடுத்தார். புதுமுகம் ஷுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கேப்டன் ரோஹித் சர்மாவும் 7 ரன்களில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி ரசிகர்களுக்கு இன்று அதிர்ச்சியே கிடைத்தது. நியூஸி. வீரர் போல்ட் 5 விக்கெட்டுகளையும் கிராண்ட்ஹோம் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

நியூஸிலாந்து அணி விளையாடிய முதல் ஓவரில் ஒரு சிக்ஸரும் 2 பவுண்டரிகளும் அடுத்தடுத்து அடித்த கப்தில், 14 ரன்களில் புவனேஸ்வர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு வில்லியம்சன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த நிகோல்ஸும் டெய்லரும் அதிரடியாக விளையாடி 14.4 ஓவர்களில் இலக்கை எட்டினார்கள். நிகோல்ஸ் 30 ரன்களும் டெய்லர் 25 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 37 ரன்களும் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். 

இது, பந்துகள் வித்தியாசத்தில் இந்திய அணியின் மோசமான ஒருநாள் தோல்வியாகும். 212 பந்துகள் மீதமுள்ள நிலையில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.