
டபள்யூ.டபள்யூ.இ என்று அழைக்கப்படும் தொழில்முறை மல்யுத்தப் போட்டியில் ஜான் ஸீனா எனும் மல்யுத்த வீரர் மிகப் பிரபலம். இதில் சுமார் 16 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் 2-ஆவது முறையாக இந்திய கேப்டன் விராட் கோலியை சீண்டும் விதமாக கிரிக்கெட் விளையாட்டு பெரிய ஈர்ப்பு இல்லாத அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஸீனா, ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு கோலியின் படம் ஒன்றை பதிவிட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது கோலியின் படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
''என்னை யாராலும் பார்க்க முடியாது'' (யூ கான்ட் சீ மீ) என்ற வாசகம், ஜான் ஸீனா குறித்து அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். எனவே கோலி கைகுலுக்குவது போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்து அதில் தனது வாசகத்தை ஜான் ஸீனா பதிவிட்டுள்ளார். ஜான் ஸீனா உடன் நேரடி நடப்பு இல்லாத கோலி தொடர்பான இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.