காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

உலகின் சிறந்த கிரிக்கெட் அணியாக மாற்றிக் காட்டுகிறேன்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சபதம்!

சிறந்த வீரர்களைக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைக்கான உலகின் சிறந்த அணியை உருவாக்கி வருகிறேன்...

News image
Updated On :22 ஜூலை 2019, 10:18 am

எழில்

3 நாள் சுற்றுப் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா வந்தடைந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களுடனான கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொண்டார். வாஷிங்டன் டிசி-யில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

சிறந்த வீரர்களைக் கொண்டு அடுத்த உலகக் கோப்பைக்கான உலகின் சிறந்த அணியை உருவாக்கி வருகிறேன். என் திட்டங்கள் குறித்து இப்போது கூறமாட்டேன். என் வார்த்தைகளைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள் என்றார். 

இங்கிலாந்தில் நடந்துமுடிந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மீது அந்நாட்டு ரசிகர்கள் மிகவும் கோபமாக உள்ள நிலையில் இதுபோன்ற ஒரு வாக்குறுதியை அளித்துள்ளார் இம்ரான் கான். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.