கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அலெக்ஸ் கேரியை ஏன் தேர்வு செய்யவில்லை?: கேள்வி எழுப்பும் ஆஸி. முன்னாள் வீரர்கள்!

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி...

News image
Updated On :27 ஜூலை 2019, 9:23 am

எழில்

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

நியூலேண்ட் டெஸ்டில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் காரணமாகத் இடைக்காலத்தடையை எதிர்கொண்ட ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகிய மூவரும் மீண்டும் ஒன்றாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். எனினும் உலகக் கோப்பைப் போட்டியில் அற்புதமாக விளையாடிய அலெக்ஸ் கேரிக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இதனால் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் சிலர் அதிருப்தி அடைந்துள்ளார்கள். முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் கூறியதாவது: உலகக் கோப்பையில் அவ்வளவு பிரமாதமாக விளையாடியும் 2-வது சிறந்த விக்கெட் கீப்பராக இருந்த பிறகும் அலெக்ஸ் கேரியைத் தேர்வு செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது என்று தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார். இதே போன்ற ஆச்சர்யத்தையும் வருத்தத்தையும் ஷேன் வார்னே வெளிப்படுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.