‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆஸ்திரேலியாவில் எனக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்: முரளி விஜய் ஆதங்கம்!

பயிற்சியின்போது நான் விளையாடப் போவதில்லை எனத் தெரிந்து நொறுங்கிப் போனேன்... 

News image
Updated On :1 மார்ச் 2019, 9:53 am

எழில்


தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சரியாக விளையாடாத முரளி விஜய்க்குத் தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இடமில்லை. மயங்க் அகர்வால், கே.எல். ராகுல், விஹாரி ஆகியோர் ஆஸி.க்கு எதிரான கடைசி இரு டெஸ்டுகளில் தொடர்க்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். 

எனினும் தன்னை மூன்றாவது டெஸ்ட்டில் தேர்வு செய்திருக்கவேண்டும் என்று ஆதங்கப்படுகிறார் முரளி விஜய். இதுகுறித்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:

இந்திய அணியில் இடம்பெறாதது என்னை வேதனைப்படுத்துகிறது. வருத்தம் இல்லை, எனினும் நான் வேதனையடைந்துள்ளேன். மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டில் நான் விளையாடுவேன் என நினைத்தேன். பெர்த்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்ஸில் நான் நன்றாக விளையாடினேன். ஒரு இன்னிங்ஸ் சரியாக அமைந்தால் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிடுவேன் என நினைத்தேன். எனவே மெல்போர்னில் விளையாடுவேன் என நம்பிக்கையுடன் இருந்தேன். பயிற்சியின்போது நான் விளையாடப் போவதில்லை எனத் தெரிந்து நொறுங்கிப் போனேன். மக்களுக்கு என்னைத் தெரியவில்லை, அல்லது புரிந்துகொள்வதில்லை. புதுமுகங்களால் எனது வாய்ப்பு பறிபோகும் என அஞ்சவில்லை. எனக்கு 34 வயதுதான் ஆகிறது. நல்ல உடற்தகுதியுடன் உள்ளேன். இன்னும் நிறைய டெஸ்ட்டுகள் விளையாடும் அளவுக்கு வலு உள்ளது. மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் தருணங்களை எதிர்கொள்வேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.