இந்தியாவில் எங்களுக்கு ஏன் டிஆர்எஸ் இல்லை?: மிதாலி ராஜ் கேள்வி!
மகளிர் கிரிக்கெட்டில் டிஆர்எஸ் பயன்பாடு எல்லா நாடுகளிலும் சீராகப் பின்பற்றப்படவேண்டும்...


மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கெனவே, 2 ஒரு நாள் ஆட்டங்களில் வெற்றி பெற்றதை அடுத்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா. முதலில் விளையாடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து 48.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய கேதரீன் பிரன்ட் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது ஆட்டம் வரும் 4ஆம் தேதி அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மகளிர் கிரிக்கெட்டில் டிஆர்எஸ் பயன்பாடு எல்லா நாடுகளிலும் சீராகப் பின்பற்றப்படவேண்டும் என்று இந்திய ஒருநாள் கேப்டன் மிதாலி ராஜ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: பெரிய போட்டிகளில் டிஆர்எஸ் முறை வழங்கப்படவேண்டும். அதன் விதிமுறைகளைப் பற்றி வீராங்கனை அறிந்துகொள்ள சிறிது நாளாகும். எங்களுக்கு நியூஸிலாந்தில் டிஆர்எஸ் வழங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் இல்லை. இதுபோல அதன் பயன்பாடு சீராக இல்லையென்றால் இப்படியொரு வசதியை ஏற்றுக்கொள்வது கடினமாகிவிடும். தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படும்போதுதான் அதைப் பற்றி வீராங்கனைகள் புரிந்துகொண்டு எப்போது பயன்படுத்த வேண்டும், பயன்படுத்தக் கூடாது என்பதை அறிந்துகொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...