பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

கபில் தேவ், சச்சினின் சாதனைப் பட்டியலில் இணைந்த ஜடேஜா!

ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள், 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

News image
Updated On :6 மார்ச் 2019, 5:09 am

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.  கேப்டன் கோலியின் 116, குல்தீப் யாதவ் 3 விக்கெட் போன்றவை அணியின் வெற்றிக்கு வித்திட்டன. முதலில் ஆடிய இந்தியா 250 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸி. 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள், 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா.

இதற்கு முன்பு 1990 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா, இன்று 10 ரன்கள் எடுத்தபோது சாதனைப் பட்டியலில் இணைந்தார். கபில் தேவ், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள், 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். பிறகு அவர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கபில் தேவ் (3783 ரன்கள் + 253 விக்கெட்டுகள்) 
சச்சின் டெண்டுல்கர் (18426 ரன்கள் + 154 விக்கெட்டுகள்) 
ரவீந்திர ஜடேஜா (2011 ரன்கள் + 172 விக்கெட்டுகள்) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.