எம்சிசி அமைப்பின் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்கிற பெருமையை அடையவுள்ள சங்கக்காரா!

அக்டோபர் 1 முதல் இந்தப் பதவியில் ஒரு வருடக் காலத்துக்கு அவர் அமர்த்தப்படுவார்...
எம்சிசி அமைப்பின் முதல் வெளிநாட்டுத் தலைவர் என்கிற பெருமையை அடையவுள்ள சங்கக்காரா!

மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்சிசி) அமைப்பின் முதல் வெளிநாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் இலங்கையின் முன்னாள் வீரர் குமார் சங்கக்காரா.

அக்டோபர் 1 முதல் இந்தப் பதவியில் ஒரு வருடக் காலத்துக்கு அவர் அமர்த்தப்படுவார். இதன்மூலம், பாரம்பரியமிக்க எம்சிசி அமைப்பின் இங்கிலாந்து குடிமகனாக அல்லாத முதல் தலைவர் என்கிற பெருமையை அடைந்துள்ளார் சங்கக்காரா. 

எம்சிசி அமைப்பு 1787-ல் தொடங்கப்பட்டது. கிரிக்கெட் போட்டிகளை நிர்வகித்து வரும் ஐசிசி அமைப்புக்கு கிரிக்கெட் ஆட்டங்களுக்கான விதிமுறைகளைப் பரிந்துரை செய்யும் பணியை எம்சிசி வேர்ல்ட் கிரிக்கெட் கமிட்டி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com