முதல் டெஸ்ட்: 431 ரன்களுக்கு தெ.ஆ. ஆல் அவுட்! அஸ்வினுக்கு 7 விக்கெட்டுகள்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
முதல் டெஸ்ட்: 431 ரன்களுக்கு தெ.ஆ. ஆல் அவுட்! அஸ்வினுக்கு 7 விக்கெட்டுகள்!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி, தனது முதல் இன்னிங்ஸில் 431 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியச் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா-தென் ஆப்பிரிக்கா ஆகியஇரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா் நடந்து வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 502/7 ரன்களுக்கு டிக்ளோ் செய்தது. மயங்க் அகா்வால் 215, ரோஹித் 176 ரன்களை குவித்தனா். 3-ம் நாள் முடிவில், தனது முதல் இன்னிங்ஸில் 118 ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. செனுரன் முத்துசாமி 12, கேசவ் மஹாராஜ் 3 ரன்களுடன் களத்தில் இருந்தனா்.

இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணி, 131.2 ஓவர்களில் 431 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முத்துசாமி 33 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மஹாராஜ் 9, ரபடா 15 ரன்களுடன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இந்தியத் தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளும் ஜடேஜா 1 விக்கெட்டுகளும் இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் எடுத்துள்ளார்கள். முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 71 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com