தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு! அரக்கோணம்-திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்துஇளநிலை நீட் தேர்வு: இன்று ஹால் டிக்கெட் வெளியீடு!ஊழியா்கள் - அதிகாரிகளுக்கு ஊதிய உயா்வு: பொதுத் துறை வங்கிகளுக்கு அரசு அறிவுறுத்தல்நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!ஈரானுடன் அமைதிப் பேச்சு: பாகிஸ்தானுக்கு அமெரிக்க பிரதிநிதிகள் செல்ல மாட்டார்கள்! - டிரம்ப்
/

பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டை அணிந்ததன் மூலம் அபராதத்தை எதிர்கொள்ளவுள்ள அஸ்வின்!

பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டை அஸ்வின் பயன்படுத்தியதன் மூலம் விதிமுறையை மீறியுள்ளார்.

News image
Updated On :25 அக்டோபர் 2019, 9:45 am

சமீபத்தில் ராஞ்சியில் நடந்து முடிந்த 3-வது டெஸ்டில் இடம்பெற்ற ஆர். அஸ்வின், அதற்குப் பிறகு நேராக விஜய் ஹசாரே போட்டியில் கலந்துகொண்டு தமிழக அணிக்காக விளையாடி வருகிறார். அரையிறுதியில் விளையாடிய அஸ்வின், இன்றைய இறுதிச்சுற்றிலும் பங்கேற்றுள்ளார். தமிழக அணியின் இன்னிங்ஸில் 3-வதாகக் களமிறங்கிய அஸ்வின், 8 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அஸ்வின் இன்று விளையாட வந்தபோது இந்திய அணிக்காக அவர் பயன்படுத்தும் பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்தியுள்ளார். இது பிசிசிஐயின் விதிமுறையை மீறிய செயலாகும். உள்ளூர் போட்டியில் விளையாடும்போது பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்தினால் அந்த முத்திரையை டேப்பால் மறைத்து அதன்பிறகுதான் அதை ஆட்டத்தின்போது பயன்படுத்தவேண்டும். ஆனால் பிசிசிஐ முத்திரை கொண்ட ஹெல்மெட்டை அஸ்வின் பயன்படுத்தியதன் மூலம் விதிமுறையை மீறியுள்ளார். கள நடுவர்கள் ஆட்ட நடுவரிடம் இதுகுறித்து புகார் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஆட்ட நடுவர் அஸ்வினுக்கு அபாரதம் விதிக்கக்கூடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.