பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் முதல்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. நவம்பா் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் நடைபெறவிருந்த வங்கதேச அணியுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது.
இந்நிலையில் கொல்கத்தா டெஸ்டின் ஆட்ட நேர விவரங்களை ஈடன் கார்டன்ஸ் ஆடுகள வடிவமைப்பாளர் சுஜன் முகர்ஜி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
பகலிரவு டெஸ்ட் மதியம் 1 மணிக்குத் தொடங்கலாம். ஆட்டம் முன்னதாகத் தொடங்கப்படுவதால் இரவு 8-8.30 மணிக்கு முடிந்துவிடும். இதற்குப் பிறகு தான் கொல்கத்தாவில் பனிப் பொழிவு உண்டாகும் என்பதை நாம் ஒரு நாள் ஆட்டங்களிலேயே பார்த்துள்ளோம். எனவே பனிப் பொழிவு காரணமாக டெஸ்ட் ஆட்டத்துக்குப் பிரச்னை எதுவும் இருக்காது. அப்படியே பனிப் பொழிவு ஏற்பட்டாலும் அதைச் சரிசெய்ய தகுந்த ஏற்பாடுகளுடன் உள்ளோம் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கடக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள் (27 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! துலா ராசிக்கு மன அமைதி!
பொறுப்பால் உயரும் பெருமை!
கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா ‘த்ரில்’ வெற்றி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


