புல்லாங்குழல் வாசித்த தவன்: 'அது லுங்கி இல்ல வேஷ்டி' கலாய்த்த அஸ்வின்!
அதிரடி தொடக்க வீரர் ஷிகர் தவன் செய்த காரியத்துக்கு அஸ்வின் அளித்த பதிலடி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன், மே.இ.தீவுகளுடனான தொடரில் ரன் குவிக்க திணறியதால் இந்திய ஏ அணியில் இடம்பிடித்து ஆட்டத்திறனை மேம்படுத்தி வருகிறார். தமிழக வீரர் அஸ்வின், டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பிடித்திருந்தாலும், ஆடும் லெவனில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஷிகர் தவனின் பதிவுக்கு அஸ்வின் அளித்த பதிலடி வைரலாகப் பரவி வருகிறது. அதில் லுங்கி டான்ஸ் பாடல் வரிகளை மையப்படுத்தி வேஷ்டி அணிந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்த தவன், நானும் இப்போது தென்னிந்தியன் ஆனேன் என்று தெரிவித்தார். அதற்கு ''அது லுங்கி இல்லை ப்ரோ, வேஷ்டி'' என அஸ்வின் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதுபோன்று புல்லாங்குழல் வாசிக்கும் விடியோவையும் ஷிகர் தவன் பகிர்ந்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக புல்லாங்குழல் வாசிக்க பயிற்சி செய்து வருகிறேன் என ஜூன் 05, 2018 அன்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

