கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

விஜய் ஹசாரே போட்டியில் விளையாடவுள்ள ரிஷப் பந்த், ஷிகர் தவன்!

தில்லி அணியில் இடம்பெற்றுள்ள ஷிகர் தவன், ரிஷப் பந்த், வேகப்பந்துவீச்சாளர் சைனி ஆகியோர் தாங்கள் விளையாடுதை உறுதி செய்துள்ளார்கள்.

News image
Updated On :17 செப்டம்பர் 2019, 11:02 am

எழில்

விஜய் ஹசாரே கோப்பைப் போட்டி செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 25 வரை பெங்களூரு, ஜெய்ப்பூர், வதோதரா, டெஹ்ராடுன் ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான தில்லி அணியில் இடம்பெற்றுள்ள ஷிகர் தவன், ரிஷப் பந்த், வேகப்பந்துவீச்சாளர் சைனி ஆகியோர் தாங்கள் விளையாடுதை உறுதி செய்துள்ளார்கள்.

அக்டோபர் 2 அன்று இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதனால், இந்திய அணியின் முதன்மையான விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த், இப்போட்டியில் எவ்வளவு ஆட்டங்களில் விளையாடுவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஷிகர் தவனும் சைனியும் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்காததால் அவர்கள் முழுப்போட்டியிலும் பங்கேற்பார்கள்.

தவன், ரிஷப், சைனி ஆகியோர் தில்லி அணிக்காக விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நேரம் கிடைக்கும்போது விராட் கோலியும் இஷாந்த் சர்மாவும் இப்போட்டியில் கலந்துகொள்வார்கள் என்று கூறியுள்ளார் தில்லி கிரிக்கெட் சங்கத் தலைவர் ரஜத் சர்மா. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.