புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

டி20 உலகக் கோப்பைக்கு எனது தேர்வு ரிஷப் பந்த்: சுனில் கவாஸ்கர்

எம்.எஸ்.தோனியைத் தாண்டி சிந்திக்க வேண்டும்; ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இளம் வீரர் ரிஷப் பந்த் அணியில் இடம்பெற வேண்டும் என்பது எனது விருப்பம்

News image
Updated On :20 செப்டம்பர் 2019, 7:45 pm

DIN


எம்.எஸ்.தோனியைத் தாண்டி சிந்திக்க வேண்டும்; ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு இளம் வீரர் ரிஷப் பந்த் அணியில் இடம்பெற வேண்டும் என்பது எனது விருப்பம் என்றார் இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
ஹிந்தி செய்தி சேனல் ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளித்தபோது,  வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தோனி இடம்பெற வேண்டும் என கருதுகிறீர்களா? என்று கவாஸ்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, நாம் தோனியைத் தாண்டி சிந்திக்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைப் போட்டியைக் கணக்கில் கொண்டால்,  அணியில் கட்டாயம் ரிஷப் பந்த் இடம்பெற வேண்டும் என்பதே எனது விருப்பம். இல்லையெனில், சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யலாம். அவர் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் என்று பதிலளித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
அணியில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.
ரிஷப் பந்த் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், அவரது கிரிக்கெட் பயணத்தை ஆய்வு செய்தால் சிறப்பாகவே உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக அவர் செயல்பட்டுள்ளார். அவர் விளையாட்டில் செய்யும் தவறுகளைத் திருத்திக் கொள்வார் என்று நம்பலாம் என்றார் கவாஸ்கர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.