ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு: மீண்டும் இடம்பிடித்த சிடில், லயன்!
By எழில் | Published On : 04th January 2019 01:21 PM | Last Updated : 04th January 2019 01:21 PM | அ+அ அ- |

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் ஜனவரி 12 முதல் தொடங்குகிறது.
மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபிஞ்ச் கேப்டனாக உள்ள இந்த அணியில் பீட்டர் சிடில், லயனுக்கு ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய அணியிலிருந்து 6 பேர் மட்டுமே இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்கள். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள ஸ்டார்க், ஹேஸில்வுட், பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கு ஒருநாள் தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளன. டிராவிஸ் ஹெட், கிறிஸ் லின், ஷார்ட், பென் மெக்டர்மாட், ஆஷ்டன் அகர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். 2010-க்குப் பிறகு ஆஸி. அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார் பீட்டர் சிடில். அதேபோல நாதன் லயன் கடைசியாகக் கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்தார். அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), ஜேஸன் பெஹ்ரென்டோர்ஃப், அலெக்ஸ் கேரி, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், உஸ்மான் கவாஜா, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், பீட்டர் சிடில், பில்லி ஸ்டேன்லேக், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸம்பா.
ஒருநாள் தொடர்
முதல் ஒருநாள் (சிட்னி): ஜனவரி 12 - காலை 7.50* முதல்
2-வது ஒருநாள் (அடிலெய்ட்): ஜனவரி 15 - காலை 8.50* முதல்
3-வது ஒருநாள் (மெல்போர்ன்): ஜனவரி 18 - காலை 7.50* முதல்
* இந்திய நேரம்