சுழற்பந்தில் இப்படியா தடுமாறுவது: சேவாக் விளாசல்

சுழற்பந்தில் இந்திய அணி இப்படியா தடுமாறி தடுப்பாட்டம் ஆடுவது என்று அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுழற்பந்தில் இப்படியா தடுமாறுவது: சேவாக் விளாசல்

சுழற்பந்தில் இந்திய அணி இப்படியா தடுமாறி தடுப்பாட்டம் ஆடுவது என்று அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணி சுழற்பந்துவீச்சை எதிர்த்து விளையாட முடியாமல் தடுமாறுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

சுழற்பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்ளும் சிறந்த அணியாக இந்தியா திகழும்போதும் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மற்றும் முஜிப் உர் ரஹ்மான் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஃபாபியன் ஆலன் ஆகியோரை தடுமாற்றத்துடன் தான் எதிர்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து முன்னாள் கேப்டனும், அதிரடி துவக்க வீரருமான வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

ரஷித் கானின் முதல் 4 ஓவர்களில் 25 ரன்கள் எடுத்திருந்தபோதிலும் அடுத்த 6 ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளோம். அதேபோன்று ஃபாபியன் ஆலனுக்கு எதிராக முதல் 5 ஓவர்களில் 34 ரன்கள் குவித்திருந்தோம். ஆனால், அடுத்த 5 ஓவர்களில் 18 ரன்கள் தான் சேர்த்தோம். சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்தியாவுக்கு இந்த தடுப்பாட்டம் தேவைதானா? இதிலிருந்து இந்திய அணி விரைவில் வெளிப்பட்டு வர வேண்டும். நேர்மறையாக விளையாடி ரன்குவிக்க முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com