தில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஃபீல்டிங்கில் கோட்டையைப் பிடித்த இந்தியாவும்! கோட்டை விடும் பாகிஸ்தானும்!

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த ஃபீல்டிங் அணியாக இந்தியா திகழ்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் சிறந்த ஃபீல்டிங் அணியாக இந்தியா திகழ்வதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு தொடரில் இதுவரையிலான ஆட்டங்களின் அடிப்படையில் ஃபீல்டிங்கில் சிறந்த அணியாக இந்தியாவும், மோசமான அணியாக பாகிஸ்தானும் உள்ளது.

Story image

பாகிஸ்தானுக்கு எதிராக யுவேந்திர சாஹல் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் மட்டும் ஒரேயொரு கேட்சை தவறவிட்டார். மற்றபடி இந்திய அணி 14 கேட்சுகளையும் பிடித்து அசத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி சுமார் 14 கேட்சுகளை கோட்டை விட்டுள்ளது. இது அந்த அணிக்கு ஏற்பட்ட கேட்சு வாய்ப்புகளில் 35 சதவீதமாகும்.

Story image

இதில் அதிர்ச்சிக்குரிய விதமாக இங்கிலாந்து அணி மோசமான ஃபீல்டிங் பட்டியலில் 2-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அந்த அணி ஆஸ்திரேலிய அணியுடனான போட்டிக்கு முன்னதாக வரை 12 கேட்சுகளை நழுவவிட்டனர். நியூஸிலாந்து அணி 9 கேட்சு வாய்ப்புகளை தவறவிட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.