குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று(ஜூன் 30) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
குரூப்-1 தேர்வுக்கான அறிவிக்கை, தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, தேர்வர்கள் இன்று முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப்-1 தேர்வு செப். 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மொத்தம் 26 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில், துணை ஆட்சியர், உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கும்.
இதில் தேர்ச்சி பெறும் தேர்வர்கள் முதன்மைத் தேர்வை எழுதுவார்கள். அதற்கான தேர்வு தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பின்னர் அறிவிக்கும்.
Summary
The Tamil Nadu Public Service Commission (TNPSC) has announced that applications for the Group 1 preliminary examination can be submitted starting today (June 30).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










