ஆட்டமிழந்தார் அகர்வால்: தேநீர் இடைவேளை வரை இந்தியா நிதான ஆட்டம்!

வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது.
புகைப்படம்: டிவிட்டர் | பிசிசிஐ
புகைப்படம்: டிவிட்டர் | பிசிசிஐ


வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தின் முதல் நாள் தேநீர் இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணித் தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பிறகு, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. மயங்க் அகர்வால் பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கி அசத்தினார். இருந்தபோதிலும், அவர் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அல் அமின் பந்தில் ஸ்லிப் கேட்ச் ஆனார்.

இதன்பிறகு, ரோஹித் சர்மாவும், புஜாராவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விளையாடினர். இந்த சூழலில் அபு ஜாயெத் பவுன்சரை சிக்ஸருக்கு அனுப்ப முயல ரோஹித் சர்மா ஆட்டமிழந்திருக்கக்கூடும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த கேட்ச்சை பீல்டர் தவறவிட்டார். இதன்மூலம், ரோஹித்துக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

தற்போது தேநீர் இடைவேளையில் இந்திய அணி 1 விக்கெட்டை இழந்து 35 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 13 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com