பிங்க் நிற பந்தில் 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார் இஷாந்த்: 106 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்!

வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்த, அந்த அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்
புகைப்படம்: ஐசிசி | டிவிட்டர்


வங்கதேசத்துடனான 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்த, அந்த அணி 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு டெஸ்ட் ஆட்டமாக இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்த ஆட்டத்திலும் இந்திய வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ளத் திணறிய வங்கதேசம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

முதல் நாள் உணவு இடைவேளையின்போது வங்கதேச அணி 73 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஷமியின் பவுன்சரில் காயமடைந்த லிட்டோன் தாஸ் உணவு இடைவேளைக்குப் பிறகு பேட்டிங் செய்யவில்லை.

இதையடுத்து, எபாதத் ஹோசைனை இஷாந்த் சர்மா வீழ்த்தினார். லிட்டோன் தாஸுக்குப் பதிலாக மாற்று வீரராக மெஹதி ஹாசன் களமிறங்கினார். அவர் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இஷாந்த் பந்தில் புஜாராவிடம் கேட்ச் ஆனார். இதுவரை திணறல் ஆட்டத்தையே வெளிப்படுத்தி 19 ரன்கள் எடுத்த நயீம் ஹாசனை, மீண்டும் இஷாந்த் சர்மாவே போல்டாக்க பிங்க் நிற பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதையடுத்து, கடைசி விக்கெட்டாக அபு ஜாயெத்தை ஷமி வீழ்த்தினார். இதன்மூலம், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்கதேச அணி சார்பில் ஷத்மன் இஸ்லாம் அதிகபட்சமாக 29 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com