ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ஐபிஎல் மூலமாக இந்திய அணிக்குள் நுழைந்தேன் என்பது கட்டுக்கதை: பும்ரா

விஜய் ஹசாரே போட்டியிலும் உள்ளூர் ஆட்டங்களிலும் நன்றாக விளையாடியதால்...

News image
Updated On :27 ஏப்ரல் 2020, 4:47 am

DIN

ஐபிஎல் மூலமாக இந்திய அணிக்குள் நுழைந்தேன் என்பது கட்டுக்கதை என பிரபலப் பந்துவீச்சாளர் பும்ரா கூறியுள்ளார்.

14 டெஸ்டுகளில் விளையாடி 68 விக்கெட்டுகளும் 64 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 104 விக்கெட்டுகளும் எடுத்து உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளராக உள்ளார் பும்ரா.

ஐபிஎல் போட்டி மூலமாகத்தான் அவர் இந்திய அணிக்குள் நுழைந்தார் என்று எண்ணுபவர்களுக்கு பும்ரா பதில் அளித்துள்ளார். யுவ்ராஜ் சிங் உடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் பும்ரா கூறியதாவது:

பந்துவீச்சாளர்கள் என்னிடம் வந்து ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடத் தயாராக உள்ளதாகக் கூறுவார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் தான் உங்களை முழுமையான பந்துவீச்சாளராக மாற்றும். டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதன் மூலம் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும்

ஐபிஎல் மூலமாக இந்திய அணிக்குள் நான் நுழைந்தேன் என்பது கட்டுக்கதை. 2013-ல் ஐபிஎல்-லுக்கு நான் அறிமுகமானேன். 2013, 2014, 2015 வரை ஐபிஎல்-லில் நான் சரிவர விளையாடவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் பெறவில்லை. விஜய் ஹசாரே போட்டியிலும் உள்ளூர் ஆட்டங்களிலும் நன்றாக விளையாடியதால் தான் 2016-ல் இந்திய அணிக்குள் நுழைந்தேன் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.