மீண்டும் அசத்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள்: 2-ம் நாள் ஹைலைட்ஸ் விடியோ

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 2-வது நாளின் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.
மீண்டும் அசத்திய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள்: 2-ம் நாள் ஹைலைட்ஸ் விடியோ

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் 2-வது நாளின் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் செளதாம்ப்டனில் தொடங்கியுள்ளது. 

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. 11 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் அணியில் ஃபவாத் அலாம் இடம்பெற்றுள்ளார். சதாப் கான் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் இரு மாற்றங்கள். ஸ்டோக்ஸ், ஆர்ச்சருக்குப் பதிலாக ஸாக் கிராவ்லி, சாம் கரண் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

முதல் நாளன்று இங்கிலாந்து அணியின் அற்புதமான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள். மழையால் முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் மேலும் பல விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி இழந்திருக்கும். 

முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. இந்நிலையில் நேற்றும் இங்கிலாந்தின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. மழையால் நேற்றைய ஆட்டமும் பாதிக்கப்பட்டது. பாபர் அஸாம் 47 ரன்கள் எடுத்தார். கீழ் வரிசை பேட்ஸ்மேன்கள் சொதப்பிய போதும் விக்கெட் கீப்பர் ரிஸ்வான் சிறப்பாக விளையாடி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

2-வது நாளின் முடிவில் பாகிஸ்தான் அணி 86 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்தின் ஆண்டர்சன், பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com